ஜூலை 15ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு துணைத்தேர்வு!

 
மாணவிகள் தேர்வு சிபிஎஸ்இ

 சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று மே 13ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் மே 20ம் தேதிக்கு பின் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று  முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தை பொறுத்தவரை  98.47 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ

திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.  விஜயவாடா மண்டலம் 99.04 சதவீதம் பெற்று  2வது இடத்தையும், பிரயாக்ராஜ் 78.25 சதவீதம் பெற்று கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 15ம் தேதி தொடங்கி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் குஜராத் கலவரம் பற்றி கேள்வி கேட்ட சி.பி.எஸ்.இ..!!
துணைத் தேர்வுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என  மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களும்  ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முன், பாட வாரியாக மதிப்பெண்களை ஆய்வு செய்ய, ஆன்லைன் முறையில் மே21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் பாடம் ஒன்றுக்கு தலா ரூ. 500 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web