சிபிஎஸ்இ 10 ,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?
இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. தற்போது கோடை விடுமுறை முடிந்து தேர்வு தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் அதிக அளவு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட தாமதம் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு பாட திட்டத்தில் படித்த பொதுத்தேர்வு எழுதிய 12ம் வகுப்பு தேர்வு முடிவு மே 6 ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வருகிற 10ம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் SMS மூலமாகவும் தாங்ககள் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை பொறுத்தவரை 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 12 ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 15 ம் தேதி முதல் மார்ச் 13 ம் தேதி வரை சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொது தேர்வுகளும், பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை 39 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை cbsc.gov.in மற்றும் result.cbsc.nic.in இணையதளங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
