வரும் கல்வி ஆண்டு முதல் 2 முறை சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு!

 
 மாணவர்கள் அதிர்ச்சி... சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 3 வது மொழி கட்டாயம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்   2026 ம் ஆண்டு முதல் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த உள்ளது.  சிபிஎஸ்இ வரும் கல்வி ஆண்டு முதல் 10 ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி  2026 முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் இதற்கு  தேர்வு கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

அந்த வகையில் முதற்கட்ட தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதமும், இரண்டாம் கட்ட முடிவுகள் ஜூன் மாதமும் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. 2 கட்ட பொதுத்தேர்வில் முதல் கட்ட தேர்வை தேர்வர்கள் எழுதுவது கட்டாயம்  2 வது பொதுத்தேர்வை எழுதுவது அவர்களது விருப்பம் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும். 

சிபிஎஸ்இ மாணவிகள்

கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.   தற்போது வரை பொதுத்தேர்வை ஒருமுறை மட்டுமே மாணவர்கள் எழுதி வரும் நிலையில், இனி அடுத்து வரும் ஆண்டுகளில் 2 முறை அமல்படுத்தப்படும் .இந்தப் புதிய முறை மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது