அனைத்து ரயில்வே கேட், கேட் கீப்பர் அறைகளில் சிசிடிவி கேமராக்கள்... ரயில்வே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 
சிசிடிவி
 


 
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா  ர் வேலை நேரத்தில் பலமுறை தூங்கியதும், பலமுறை விபத்து தவிர்க்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தற்போது ரயில்வே கேட்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சிசிடிவி

ரயில்வே கேட்டுகளில் பொதுமக்கள் அழுத்தத்தால் மோதல் ஏற்படும் இடங்களுக்கு ரயில்வே போலீசார் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரயில்வே கேட்களில் 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி  ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி வழிகாட்டு நெறிமுறைகள் :

அஸ்வினி வைஷ்ணவ்
அனைத்து ரயில்வே கேட், கேட் கீப்பர் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். 
10,000 வாகனங்களுக்கு மேல் கடந்து செல்லும் ரயில்வே கேட்களில் தானியங்கி இண்டர்லாக் அமைப்பு பொருத்தப்பட வேண்டும்.
இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை கண்காணிக்கவும். 
கேட் கீப்பர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களின் அழைப்புகளை பதிவு செய்ய வேண்டும். 
ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை| பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 
லெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்கவும். 
அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும்” 
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?