சிசிடிவி கேமராவில் அம்பலமான அயோக்கியத்தனம்... வெஜ்பிரியாணியில் எலும்புத்துண்டு... பணம் தர மறுத்த இளைஞர்கள்!

 
வெஜ் பிரியாணியில் எலும்பு

நாடு முழுவதும் பல உணவகங்களில் எலியின் தலை, பூனையின் வால், பிரியாணியில் கரப்பான் பூச்சி என்று அசைவ உணவகங்கள் வாடிக்கையாளர்களின் உயிரைப் பதம் பார்த்து வரும் நிலையில், இன்னொரு பக்கம், இப்படி சாப்பாட்டில் பல்லி, கரப்பான்பூச்சி போன்றவை இருப்பதாக கூறி உணவகங்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறத்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்றில் 10 பேர்  கொண்ட இளைஞர்கள் குழுவாக சென்றுள்ளனர். அந்த உணவகத்தில் அவர்கள் வெஜ் பிரியாணி மற்றும் சிக்கன் பிரியாணி போன்றவைகளை ஆர்டர் செய்துள்ளனர். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவர் தனது வெஜ் பிரியாணியில் எலும்புத்துண்டு இருப்பதாகக் கத்தி கூச்சலிட்டுள்ளார் .

தங்களது சமையலறையில் சைவ மற்றும் அசைவ உணவுகள் தனித்தனியாக சமைக்கப்படுவதால் இப்படி ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என உணவக உரிமையாளர் கூறினார்.

எனினும் உரிமையாளரின் பேச்சைக் கேட்க மறுத்த அந்த இளைஞர்கள் கூட்டம், தொடர்ந்து இது குறித்து பிற வாடிக்கையாளர்களின் கவனத்தை திசைதிருப்ப கூச்சலிட்டனர். இந்த விஷயம் பெரிதாகி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த இளைஞர்கள் வேண்டுமென்றே வெஜ் பிரியாணியில் எலும்புத்துண்டைப் போட்டு நாடகமாடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.  

வெஜ் பிரியாணியில் எலும்பு

இது குறித்து காவல்துறையிடம் தெரிவித்த உணவக உரிமையாளர் ரவிகர் சிங் "அவர்கள் ₹5,000-6,000 வரையிலான பில் தொகையை செலுத்துவதைத் தவிர்க்க விரும்பியுள்ளனர். அவர்களின் செயல்கள் முற்றிலும் வேண்டுமென்றே செய்யப்பட்டவை" என விளக்கம் அளித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?