பகீர் சிசிடிவி காட்சிகள்... கழிவறையில் இருந்து உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நபர்!

 
கழிவறை விசாரணை

குஜராத்  மாநில  உயர்நீதிமன்றத்தில்  ஜூன் 20ம் தேதி  ஒரு வழக்கின் விசாரணை காணொளி மூலம் நடத்தப்பட்டது. இந்த விசாரணையில்  ‘சமத் பேட்டரி’ என்ற பெயரில் பதிவு செய்த ஒரு நபர் கழிவறையில் அமர்ந்தபடி விசாரணையில் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி நிர்சர் எஸ். தேசாய் முன்பு நடந்த இந்த விசாரணை, காஸ் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒரு நிமிட வீடியோவில், மஞ்சள் நிற சட்டை அணிந்த அந்த நபர், தனது மொபைல் ஃபோனை கழிவறை தரையில் வைத்து, புளூடூத் இயர்ஃபோன் அணிந்தபடி விசாரணையில் பங்கேற்றதாகத் தெரிகிறது.  

இந்த வழக்கு, காசோலை மோசடி  தொடர்பான ஒரு குற்ற வழக்கில் மனுதாரராக இருந்த அந்த நபர், ஒரு முதல் தகவல் அறிக்கையை  ரத்து செய்யக் கோரிய மனுவில் பதில் அளிப்பவராக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், அவர் கழிவறையில் இருந்து எழுந்து, தன்னைச் சுத்தம் செய்து, பின்னர் வேறு அறைக்கு சென்று மீண்டும் வீடியோ காலில் வந்தார்.

கழிவறை விசாரணை

இச்சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி, நீதிமன்ற அவமரியாதை குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு  குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளுக்கு காணொளி விசாரணை வசதியை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதுபோன்ற அவமரியாதையான நடவடிக்கைகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே இதே போல் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட நபருக்கு  ரூ.2 லட்சம் அபராதமும், சமூக சேவையும் விதிக்கப்பட்டது   என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது