ஹுமாயூன் கல்லறை மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து... 6 பேர் உயிரிழப்பு; 12 பேர் படுகாயம்!

 
ஹிமாயூன் கல்லறை

தலைநகர் டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள முகலாய பேரரசர் ஹுமாயூனின் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த  விபத்தில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.  

ஹிமாயூன் கல்லறை

இந்த விபத்து, கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு தர்காவில் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.   மேற்கூரை இடிந்து விழுந்ததில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  டெல்லி தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 12 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிமாயூன் கல்லறை

ஹுமாயூன் கல்லறை, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னமாக அமைந்துள்ளது. இதனை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஒரு முக்கிய இடமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?