செல்போன் பேட்டரி வெடித்து கடைக்காரர் உடல் சிதறி பலி... பயங்கர வீடியோ!!

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் காந்தி தெரு பகுதியில் வசித்து வருபவர் விநாயகமூர்த்தி . இவர் கல்புதூர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் கடையை மூடுவதற்கு முன்பு தேறாத பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது வழக்கம். நேற்று இரவு 8 மணி அளவில் வழக்கம்போல் கடையை மூடுவதற்கு முன்பாக பழைய பேப்பர் மொபைல் போன் உட்பட சில பொருட்களை தீயிட்டு எரித்துள்ளார்.
அப்போது தீயில் எரிந்து கொண்டிருந்த செல்போன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதில் முகத்தில் படுகாயம் அடைந்த விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார், விநாயகமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல இரும்பு கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை தீவைத்து எரிக்கும் போது அருகில் இருக்க வேண்டாம், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து இருக்க வேண்டும். அதேபோல கண்ணாடி பாட்டில்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!