செல்போனால் விபரீதம்!! ரயில் மோதியதில் கல்லூரி மாணவி பலி!! தொடரும் சோகம்!!

 
கிருத்திகா

இன்றைய இளசுகள் 24 மணி நேரமும் கையில் ஆறாம் விரலாய் எந்நேரமும் செல்போனை வைத்து தொலைவில் உள்ள யாருடனோ பேசிக்கொண்டே இருக்கின்றனர். அருகில் நடப்பதை கவனிப்பதற்கு யாருக்கும் இங்கே நேரமில்லை. செல்போனில் பேசவும், பாட்டுக்கேட்கவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையோ,மருத்துவமனையோ, ரயில்நிலையமோ, பேருந்து நிறுத்தமோ, பயணமோ  கோவில் கர்ப்பக்கிரகமோ எதுவும் அக்கறை இல்லை. என் உலகம், என் விருப்பம் என்பது போல் அலட்சியமாக நடந்து வருகின்றனர்.

கிருத்திகா

இந்த அலட்சிய போக்கு பல நேரங்களில் அசம்பாவிதங்களையும், விபரீதங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், தண்டவாளத்தை கடக்கும் போது கூட செல்போனை விடுவதில்லை. இதனால் பல உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதே போல் சென்னை பொத்தேரி ரயில் நிலையம் அருகே பல்லவன் விரைவு ரயில் மோதி தனியார் பல்கலைக்கழக மாணவி கிருத்திகா  உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


தாம்பரம், பெங்களத்தூர் பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகள் நடடைபெற்ற வண்ணம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் B.optom 3ம் ஆண்டு படித்து வரும் மாணவி கிருத்திகா. இவர்  பெருங்களத்தூரில் வசித்து வருபவர். இவர்  தினமும் கல்லூரிக்கு ரயிலில் வந்து செல்வது வழக்கம். வழக்கம் போல் கல்லூரி முடிந்த நிலையில் மாலை வீடு திரும்ப பொத்தேரி ரயில் நிலையத்திற்கு வந்தார்.  பல்லவன் விரைவு ரயில் வந்து கொண்டிருந்த போது மாணவி கிருத்திகா மீது மோதியது.

ரயில்

இதனால்  உடல்சிதறி மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ரயில்வே த போலீசார் கிருத்திகாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. செல்போன் பேசிய படி தண்டவாளத்தை கடந்து சென்றதால் இந்த விரைவு ரயில் வந்ததை கிருத்திகா கவனிக்கவில்லை. இதனால் ரயில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web