செல்போன் கடை உரிமையாளர் கடத்தல் விவகாரம்.. மேலும் இருவர் அதிரடியாக கைது!

 
பட்டினம்பாக்கம் காவல் நிலையம்

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன் (32). பரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். இவருடன் ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். மே 17ஆம் தேதி இரவு தனது வீட்டில் விருந்து நடப்பதாகக் கூறி ஜாவித் சைபுதீனை அந்தப் பெண் பட்டினபாக்கம் கற்பகம் அவென்யூ இரண்டாவது தெருவுக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதை நம்பி அந்த இடத்திற்கு சென்ற ஜாவித் சைபுதீனை, அங்கு தயாராக இருந்த கும்பல் திடீரென காரில் கடத்தி மதுரவாயலுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சோனியா

இதையடுத்து, உன்னைக் கொலை செய்ய 30 லட்சம் ரூபாய் ஒருவர் எங்களுக்கு தருவதாகவும், நீ எங்களுக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் உன்னை வாழ விடுவோம், இல்லையேல் கொன்று விடுவோம் என்றும் ஒருவர் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், பயந்துபோன ஜாவித், குடும்பத்தினரிடம் பேசி ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.பின்னர் 50 லட்சத்தை கடத்தல்காரர்களிடம் கொடுத்தார்.

இதையடுத்து கடந்த மே 18ம் தேதி மாலை சேத்துப்பட்டு பகுதியில் கடத்தல் கும்பல் தன்னை இறக்கிவிட்டதாக ஜாவித் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.ஜாவித் புகாரின் பேரில் சென்னை பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர். மேலும், ஜாவித்தை பட்டினப்பாக்கம் வர வைத்த பெண் யார் என போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஜாவித் சைபுதீனை மது விருந்துக்கு அழைத்து காரில் கடத்தி 50 லட்சம் பணம் பறித்த சம்பவத்தில் வேலூரை சேர்ந்த சோனியா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்ட இளையான்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அம்பத்தூரைச் சேர்ந்த ஷாஜி, சக்திவேல் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இளம் நடிகர் கைது

இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், கொரட்டூர் பகுதியை சேர்ந்த அப்பன்ராஜ், அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் ஆகிய 2 பேரை பட்டினம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web