செல்போன், பேனா கொண்டு செல்லத் தடை... விஜய் கல்வி விருது 2வது நாள் துவங்கியது!

 
விஜய்

விஜய் கல்வி விருது வழங்கும் விழா 2வது நாள் துவங்கியது. இன்று காலையிலேயே 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் ஆர்வமுடன் வந்திறங்கினர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் ‘கல்வி விருது' வழங்கும் விழாவில் செல்போன், பேனா, நோட்பேட் என எதுவுமே கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் பொருட்களைப் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. விழா முடிந்த பிறகு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கான்வென்ஷன் செண்டர். இன்று காலை தமிழகம் முழுவதும் இருந்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து, ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்துகிறார் நடிகர் விஜய்.

விஜய்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில்  நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை முதலே இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி  ஆனந்த் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேற்று நேரில் பார்வையிட்டார்.  

விஜய் மாணவிகள்

இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நடிகர் விஜய், மாணவர்களிடையே பேசுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களை சந்தித்த விஜய் பேசியது பரபரப்பாக வைரலானது குறிப்பிடத்தக்கது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web