இன்று காலை முதல் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.. 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல்!!

 
நாய்கள்

சென்னை முழுவதும் இன்று தெருநாய்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தெருநாய்க்கடியால் அடுத்தடுத்து விபரீதங்கள் அதிகரித்து வருகின்றன. வளர்ப்பு நாய், தெருநாய் என்று நாய் கடிக்குள்ளாகி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியில்  இன்று ஜூலை 10ம் தேதி  காலை முதல் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்படும் என சென்னை  மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் தெரு நாய்கள் வழக்கு

சென்னை மாநகராட்சி முழுவதும் உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார். இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த முகாமில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நாய்கள்

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ”ஜூலை 10ம் தேதி தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி  தொடங்க உள்ளது. சென்னையில் இதற்கு முன்பு 2018ம் ஆண்டு இப்பணி நடத்தப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பின்படி 59,000 நாய்கள் இருந்தன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த பணி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web