99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி!

 
சின்ன வெங்காயம்

 வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நட்பு நாடுகளான பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வெங்காயம்

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம் ஆண்டில் காரீஃப் மற்றும் ரபி பயிர்கள் குறைவாக மதிப்பிடப்பட்ட பின்னணியில் போதுமான அளவு உள்நாட்டில் கிடைக்கும் தன்மையை உறுதி செய்யவும், சர்வதேச சந்தையில் தேவை அதிகரிக்கும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம்
இந்த நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கான ஏஜென்சியான தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (என்.சி.இ.எல்), உள்நாட்டு வெங்காயத்தை இ-பிளாட்ஃபார்ம் மூலம் எல் 1 விலையில் ஏற்றுமதி செய்து, இலக்கு நாட்டின் அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஏஜென்சி அல்லது ஏஜென்சிகளுக்கு 100% முன்கூட்டியே பணம் செலுத்தும் அடிப்படையில் பேச்சுவார்த்தை விகிதத்தில் வழங்கியது.மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளுக்காக விசேசமாக பயிரிடப்பட்ட 2000 மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web