கலைஞர் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி!

 
கலைஞர் நாணயம்


 
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. இவரது பெயரில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கலைஞர் பெயரில் நினைவு நாணயம் வெளியிட ஆளும் திமுக அரசு விருப்பம் கொண்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது.

கலைஞர் நூற்றாண்டு விழா

இந்நிலையில் மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று  'முத்தமிழ் அறிஞர் கலைஞர்' டாக்டர் மு.கருணாநிதி  பெயரில் நினைவு நாணயம் வெளியிடலாம் என அனுமதி அளித்துள்ளது.  இந்த நாணயத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கலைஞரின் பெயருடன்  'தமிழ் வெல்லும்' என்ற வாசகமும் இடம்பெறும் என தெரிவித்துள்ளது.  

கலைஞர் சிலை

இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின்  கெஜட்டில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நாணயத்துக்கான  மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!