விடுதலைப் புலிகள் இயக்கதிற்கு மேலும் 5 ஆண்டுகள் தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு!

 
விடுதலை புலிகள் தடை
விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மத்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது. இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டன. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழகத்தில் சென்னை, நீலகிரி, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த தீர்ப்பாயம், விடுதலைப்  புலிகள் இயக்கம் மீதான தடை சரியானதுதான் என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. மே 14, 2019 அன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த தடை நேற்றுடன் முடிவடைவதால், இந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1967-ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவு 31 மற்றும் துணைப்பிரிவு 3ன் கீழ் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிப்பவை. இது இந்திய மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.'

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோல்வியடைந்தாலும் 'ஈழம்' என்ற சித்தாந்தத்தை அந்த அமைப்பு கைவிடவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில முன்னாள் தலைவர்களும் உறுப்பினர்களும் ஈழத்துக்கான நிதி சேகரிப்பிலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே பிரிவினைவாத கருத்துகளை பரப்பும் புலிகள் அமைப்பை இன்னும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டு நேற்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web