புத்தாண்டு நாளில் சவால்.. 20 நிமிடத்தில் 2 பாட்டில் மது.. பிரபல யூடியூபருக்கு நேர்ந்த சோகம்!
தாய்லாந்தில் காந்தீ என்ற 21 வயது இளைஞர் வசித்து வந்தார். அவர் யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் புத்தாண்டை தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் காந்தீக்கு ஒரு சவால் கொடுத்தனர். 20 நிமிடத்தில் 2 பாட்டில் மது அருந்தினால் 75 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இந்த சவாலை காந்தீ ஏற்று மது அருந்தினார். அவர்கள் காந்தீக்கு 2, 350 மில்லி விஸ்கிகளை வாங்கி கொடுத்துள்ளனர். சவாலின் பேரில் அதை முழுவதுமாக 20 நிமிடத்தில் குடித்துள்ளார். விஸ்கியை குடித்துவிட்டு சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். பின்னர், அவரை நண்பர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் போதையில் இருந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!