தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...!!

 
தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம்- பேரிடர் மேலாண்மை தகவல்..!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இன்றும், நாளையும் கனமழை பெய்யலாம் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்   வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகின்றன.

இடி மின்னல் மழை

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இன்று நவம்பர்  7 முதல் 10ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். 11, 12ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். அதன்படி கோவை,  நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர்,கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மழை


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை  நவம்பர்  8ம் தேதி கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நேற்று நவம்பர் 6ம் தேதி  காலை 8.30மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web