அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!

 
மழை

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 5ம் தேதி நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி   மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவி வருகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக மாறக்கூடும். 

மழை
  அதே நேரத்தில்  தமிழகத்தின்  மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று   வீசக்கூடும்.  

வெயில் மழை

கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் .  வடக்கு கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில்   மணிக்கு 40 முதல் 50 கிமீ  வேகத்தில் வீசக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web