செப்டம்பரில் இயல்பை விட அதிகன மழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

 
மேக வெடிப்பு

செப்டம்பரில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மாதாந்திர சராசரி மழைப்பொழிவு 167.9 மி.மீ. ஆக இருக்கும்.  இது 109 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இயல்பு முதல் அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வடகிழக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை இருக்கலாம்.

எரிமலை வெடிப்பு
ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண்மேடு சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை, உத்தரகாண்ட்டில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1  தேதிகளில் மிக கனமழைக்கான  ‘ரெட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முர்ஷிதாபாத் குண்டு வெடிப்பு
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் பாதிப்புக்களை கண்டறிய மத்திய குழுக்களை நியமித்துள்ளது. அதன்படி இந்தக் குழுக்கள் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப்  மாநிலங்களில் மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மேகவெடிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடும்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?