தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... சென்னையில் தொடரும் அனல் காற்று!

 
மழை

இன்று மோக்கா புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் ஈரப்பதம் குறைந்துள்ளதால் கடந்த இரு தினங்களாகவே சென்னையில் புழுக்கமாக வெப்ப காற்று வீசி வருகிறது. மோக்கா கரையைக் கடக்கும் நிலையில், மணிக்கு 2105 கி.மீ. வேகம் வரையில் பயங்கர காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதி தீவிர புயலாக மோக்கா உருவெடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடலூர், சென்னை, தூத்துக்குடி உட்பட 9 இடங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மோக்கா  புயலாக உருமாறி வலுப்பெற்றுள்ளது. இன்று வடக்கு திசையில் நகர்ந்து மிகத்தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 5.30 கிலோ மீட்டர் மேற்கு-வடமேற்கே நிலை கொண்டுள்ளது.

வெயில் , மழை

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து  மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், இன்று மே 14ம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை 170 முதல் 210 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கக்கூடும். 

இதனையடுத்து இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அதே நேரத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் காரணமாக உடல் நலக் குறைபாடுகள்  ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். வழக்கமானதை விட உஷ்ண காற்று 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் உயரக் கூடும்.  நகரின் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web