தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதே போன்று தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 இன்று  9 மாவட்டங்களில் கனமழை !! கவனமா இருங்க மக்களே!!
கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என்று 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், ஜூன் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
 மழை
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web