ஆந்திராவின் தலைநகர் அமராவதி தான் ... சந்திரபாபு நாயுடு தடாலடி!

 
சந்திரபாபு நாயுடு

 இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு 3 வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். அத்துடன் சில மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த வகையில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு அமோக வெற்றி பெற்றுள்ளார். அதனையடுத்து  சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

சிறப்பு கட்டுரை | அது ஆச்சு 20 வருஷம்...தேசிய அரசியலில் மீண்டும் கிங் மேக்கராக விஸ்வரூபமெடுக்கும் சந்திரபாபு!

இந்நிலையில் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜூன் 12 நாளை நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
 செய்தியாளர்களிடம் இது குறித்து  ஆந்திராவின் ஒரே தலைநகரமாக அமராவதி தான் இருக்கும்.  நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம், பழிவாங்கும் அரசியலை செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளார். 3  தலைநகர், 4 தலைநகர் என  மக்களோடு விளையாட மாட்டோம். அதே நேரம் விசாகப்பட்டினம்   வர்த்தக தலைநகரமாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web