ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் தெலுங்குதேசம்.... ஜெகன்மோகன்ரெட்டி படுதோல்வி!

 
சந்திரபாபு நாயுடு

 நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட 18வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.  இந்தத் தேர்தலில்  சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம்   மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்தே நடத்தப்பட்டன.  இதில், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு கடந்த ஜூன் 2ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

சந்திரபாபு நாயுடு


அந்த வகையில், ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.   அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி 121 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 25 இடங்களையும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.  ஆந்திராவில்  ஒரே ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web