இன்று இறுதி சடங்குகள்... சந்திரயான்-1 மிஷன் இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஹெக்டே காலமானார்!
எஸ் இந்தியாவின் தொடக்க நிலவு திட்டமான சந்திரயான்-1ன் பணி இயக்குநரான ரினிவாஸ் ஹெக்டே பெங்களூருவில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். சந்திரயான்-1 இந்தியாவின் முதல் சந்திரப் பயணமாகும், இது நிலவில் நீர் மூலக்கூறுகளைக் கண்டுபிடிப்பதில் குறிப்பிடத்தக்கது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
உடல் நலக் குறைவு காரணமாக ஹெக்டே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 71.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பணியாற்றிய ஹெக்டே, 2008 ல் ஏவப்பட்ட சந்திரயான்-1 முக்கியமாக பல முக்கிய பணிகளில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் முதல் சந்திரப் பயணமானது நிலவில் நீர் மூலக்கூறுகளின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை அடைந்தது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது..
இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் டீம் இண்டஸ் உடன் ஈடுபட்டு வந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
