மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... பயணிகள் கடும் அவதி!

 
மெட்ரோ

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க பாதையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுரங்க பாதையில் ஏற்பட்ட கோளாறு இன்னும் சரி ஆகாததால், தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.


இதனால், ஒரு வழித்தடத்தில் மட்டும் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் தொடர்ந்து ரயில்கள் தாமதமாகி வரும் நிலையில், பயணிகள் பெரிதும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.  இரவில் இருந்து தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில், தொடர்ந்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது   நீல வழித்தடத்தில், சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை இடையே 18 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகிறது என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, டோல்கேட் முதல் விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில்
விமான நிலையம் – சென்னை சென்ட்ரல் இடையே 7 நிமிட இடைவெளியிலும், விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web