எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்... தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு!

 
ரயில்

 இந்தியன் ரயில்வே ரயில் வழித்தடங்களில் சீரமைப்பு , பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில்  மைசூரு – சென்னை வழித்தடத்தில் பாலங்கள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக  விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில்

அதில் பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ரயில்வே பாலங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதன் காரணமாக மைசூரு- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ‘காவேரி’ தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16022) இன்று ஏப்ரல் 15ம் தேதி திங்கட்கிழமை, நாளை ஏப்ரல் 16ம் தேதி  செவ்வாய்க்கிழமை மற்றும் 23, 24  தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் வழியாக செல்வதற்கு பதிலாக கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், பானசவாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ரயில்வே வேலை வாய்ப்பு


இதேபோல் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு ‘காவேரி’ தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (16021) இன்று, நாளை  அத்துடன் ஏப்ரல் 23 மற்றும் 24  தேதிகளில் கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி, பானசவாடி, யஷ்வந்தபுரம் வழியாக கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் நிலையத்தை வந்தடையும்.  பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது என தெரிவித்துள்ளது.  

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web