830 மாணவர்கள் மதிப்பெண்களில் மாற்றம்!! மறுகூட்டல் மதிப்பீடுகள் வெளியீடு!!

 
மறுகூட்டல்

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள்  மே 8ம் தேதி வெளியானது. இந்நிலையில் மே 30ம் தேதி முதல் மறுகூட்டலுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்து இருந்தது.இந்த அறிவிப்பின் பேரில்   விருப்பமான மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இருந்தனர். நேற்று ஜூன் 14ம் தேதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.  மதிப்பெண் மாற்றம் குறித்து விண்ணப்பித்தவர்கள் பதிவெண் பட்டியல் மட்டும் www.dge.tn.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களில் விடைத்தாளில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மறுமதிப்பீட்டில் 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் தமிழகத்தில் மொத்தம் 94.03 %  பேர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.   இந்நிலையில்  பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் நாளை  ஜூன் 13ம் தேதி புதன்கிழமை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 8.65லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 48000க்கும் மேற்பட்டோர்

தேர்வு

பல்வேறு  காரணங்களால் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10- முதல் 29ம் தேதி வரை 79 மையங்களில் நடைபெற்றன.மே 5ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு மே 8ம் தேதி  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.  தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில்  வெளியிட்டார்.

தேர்வு

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதள முகவரிகளில்  வெளியிடப்பட்டன.  12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொறுத்தவரை மொத்தமாக  94.03 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில்  மாணவர்கள் 91.45 %, மாணவிகள் 96.38% தேர்ச்சி அடைந்திருந்தனர். விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது.  வழக்கம் போல்  மாணவர்களை விட மாணவிகள் 4.93% தேர்ச்சி.  விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அதிக தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web