அமைச்சரவையில் மாற்றம்... அமைச்சர் நாசர் நீக்கம்.. புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா நியமனம்!

 
டிஆர்பி ராஜா

தமிழக அமைச்சரவையில் திமுகவின் இரண்டாண்டு ஆட்சி காலத்தைத் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சர் நாசரின் பதவி பறிக்கப்படுகிறது. புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்படுகிறார். இரண்டாண்டு ஆட்சி காலத்தைத் தொடர்ந்து, இந்த ஆட்சியில் முதல் பதவியைப் பறி கொடுக்கும் அமைச்சராக ஆவடி நாசர் இருக்கிறார்.

திமுக ஆட்சியை இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மேலும் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன. கடந்த டிசம்பரில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட பின்னர், 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

டிஆர்பி ராஜா

தற்போது புதிய அமைச்சராக டி.ஆர். பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நாற்காலி கொண்டு வர தாமதமானதால், கீழே இருந்த கல்லை எடுத்து எறிந்தது, கிறிஸ்தவர்களால் தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என பதவி காலத்தில் அமைச்சர் நாசரின் ஒவ்வொரு வீடியோவுமே வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஆளுநர் மாளிகை  வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதல்வரின் பரிந்துரைப்படி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Governor release

புதிய அமைச்சரவை நாளை மே 11ம் தேதி காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய நிதித்துறை அமைச்சராகவும், ஆடியோ சர்ச்சையில் சிக்கிய பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும், மனோ தங்கராஜ்  பால்வளத்துறை அமைச்சராகவும் மாற்றப்படுகிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த லிஸ்ட்டில், தற்போது பால்வளத்துறை அமைச்சரான நாசரை விடுவித்து, புதிதாக அமைச்சரவையில் இடம் பெறும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழிற்துறையை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே போல், மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையும், அமைச்சர் கே.என்.நேருவுக்கு வருவாய் துறையும், அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஆவடி நாசரைத் தொடர்ந்து கயல்விழியும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் டாக்டர் எழிலனுக்கும் இடம் கொடுத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒதுக்கப்பட்டு லிஸ்ட் ரெடி செய்யப்பட்டுள்ளதாம்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web