நாளை முதல் இவற்றின் விலைகளில் மாற்றம்... 20 சதவிகித கட்டணங்கள் உயர்வு... அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்!

 
மின் கட்டண உயர்வு

வருஷம் பொறந்து அதுக்குள்ள ஆறு மாசம் ஓடி போயிடுச்சு. இன்றோடு ஜூன் முடிந்து நாளை ஜூலை 1ல் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஜூலை மாதம் 1ம் தேதியில் இருந்து நிறைய விஷயங்களில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.

ஹெச்.டி.எஃப்.சி. வங்கிகள் இணைப்பு நாளை  முதல் நடைமுறைக்கு வருகிறது. ஹெச்.டி.எஃப்.சி. வங்கிகள், ஹெச்.டி.எஃப்.சி., ஹோம் அனைத்தும் ஒன்றாக இணைகின்றன. அதே போன்று நாளை முதல் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படுவது நாளை  முதல் நடைமுறைக்கு வருகிறது. ஹால்மார்க்  குறித்த புதிய விதிமுறைகளால் தங்கத்தின் விலை அதிகரிக்க செய்யலாம்.

சமையல் எரிவாயு விலைகள் மாதத்தில் இரண்டு தினங்கள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை சிலிண்டர் விலை பரிசீலிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 

சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் என தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நாளை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே போல் நாளை ஜூலை 1ம் தேதி முதல் வெளிநாட்டிலுள்ள கிரெடிட் கார்டு செலவுகளுக்கு TCS கட்டணம் விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகளுக்கு வரி 20% உயர்த்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கார்டு

கட்டணத் தொகை செலவு 7 லட்சம் (அ) அதற்கு மேல் இருந்தால்  20% டிசிஎஸ் செலுத்த வேண்டும். அத்துடன்  டெல்லி, மும்பை உட்பட  மற்ற நகரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் வாரத்திலேயே சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதத்தை மாற்றி அமைக்கின்றன. இது போன்ற நிலையில், ஜூலை மாதத்தில் இதன் விலையில் மாற்றம் வரலாம் எனத் தெரிகிறது  ஜூலை 1ம் தேதி முதல் தங்கத்தின் ஹால்மார்க் குறித்த புதிய விதிகள்  நடைமுறைக்கு வருகிறது.

இன்று ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி. நாளை முதல் ரூ.1000 அபராதம் செலுத்தி தான் இணைக்க வேண்டும். அதே போன்று ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு இன்றே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web