செம க்யூட்... வாட்ஸ்-அப்ல புதிய அப்டேட்... இனி கொண்டாட்டம் தான்!

 
வாட்ஸ் அப் சானல்ஸ்

தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான பயனர்களை பெற்று முண்ணனியில் உள்ள செயலில் வாட்ஸ் அப் தான். தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், தொழில்நுட்ப வகையில் மேம்படுத்தவும் வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது  Channels என்ற புதிய அம்சத்தை    அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் பல்வேறு தரப்பினருக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப்   மூலம் தங்கள் தொழிலுக்கு விளம்பரம் செய்து வரும்   நிறுவன  உரிமையாளர்கள்   மற்றும் உள்ளடக்க தயாரிப்பாளர்கள்  போன்ற பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக்  கூறப்படுகிறது. இந்த புதிய அம்சத்தில் பயனர்கள் updates எனப்படும் புதிய டேபிற்கான அணுகலைப் பெறலாம்.  

வாட்ஸ் அப் சானல்ஸ்

இந்த Channels அம்சம் "நிர்வாகிகளுக்கான ஒரு வழி ஒளிபரப்பு கருவி" ஆகும், இதன் மூலம் அவர்கள் செய்தி, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகள் உட்பட எந்த வடிவத்திலும் தகவலை அனுப்ப முடியும்.  அத்துடன் பயனர்கள் தங்கள்  தேவைகளுக்கேற்ப சேனல்களைத் தேடக்கூடிய தனி directory ஐயும் உருவாக்கிக் கொள்ளலாம்.  தங்கள் ஆர்வங்களுக்கான சேனல்கள், விருப்பமான விளையாட்டு அணிகள், உள்ளூர் அரசாங்க அறிவிப்புகள் மற்றும் பலவற்றைக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Channels அம்சம் முதலில் கொலம்பியா மற்றும் சிங்கப்பூரில் கிடைக்கும்.  முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சம் படிப்படியாக பல நாடுகளில் விரிவுபடுத்தப்படும்.  ஒளிபரப்பு செய்திகளை அனுப்ப வாட்ஸ் அப் அட்மின்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.   பயனர்களைப் பொறுத்தவரை, ஒரு directory மூலம் தங்களுக்குப் பிடித்த சேனலைத் தேடலாம்.  

வாட்ஸ் அப் சானல்ஸ்

சேட்கள், மின்னஞ்சல்கள் அல்லது ஆன்லைன் அழைப்பு இணைப்பு வழியாகவும் பயனர்கள் சேனலுக்கு அழைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேனல் அட்மின்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள், படங்கள் மற்றவர்களுக்கு காட்டப்படாது.   ஒரு சேனலைப் பின்தொடர்வது, மறுபுறம், பயனரின் தொலைபேசி எண்ணை நிர்வாகி அல்லது பிற பின்தொடர்பவர்களுக்கு வெளிப்படுத்தாது. சேனலைப் பின்தொடர்வதற்கான தேர்வு முற்றிலும் தனிப்பட்டது.  நிர்வாகிகள் தங்கள் சேனல்களில் இருந்து ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் பகிர்தலை கட்டுப்படுத்தலாம்.   அட்மின்கள் தங்கள் சேனல்களை யார் பின்தொடரலாம் மற்றும் directoryயில் தங்கள் சேனல்கள் கண்டறியப்பட வேண்டுமா இல்லையா என்பதையும் தேர்வுசெய்யும் திறனையும்  கொண்டுள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web