கர்நாடக அரசைக் கவிழ்க்க சத்ரு சம்ஹார யாகம்... துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு!

 
யாகம்
 கர்நாடக அரசை கவிழ்க்க தனது அரசியல் எதிரிகள் கேரள கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தி தனக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் சிக்கலில் சிக்கி வைக்க முயற்சி செய்து வருவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாகத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் கருப்பு ஆடுகள், மூன்று எருமைகள் மற்றும் ஐந்து பன்றிகள் பலியிடப்பட்டன என்று சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

யாகம்
கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு அருகில் இந்த யாகம் நடத்தப்பட்டதாக கூறிய அவர், அது எங்கே நடைப்பெற்றது என்று குறிப்பிடவில்லை. அகோரிகள் நடத்திய யாகத்தின் முக்கிய நோக்கம் காங்கிரஸ் அரசை நிலைகுலையச் செய்வதும் அவர்களை ஒழிப்பதும் என்றும் சிவக்குமார் கூறினார்.யாகத்தின் பின்னணியில் பாஜக அல்லது ஜேடிஎஸ் தலைவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, கர்நாடகாவை சேர்ந்த அரசியல்வாதிகள் தான் காரணம் என்று அவர் பதிலளித்தார். 


'இந்த சடங்கை யார் நடத்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் தங்கள் முயற்சிகளைத் தொடரட்டும்; நான் கவலைப்படவில்லை. அதை அவர்களின் நம்பிக்கை முறைக்கே விட்டு விடுகிறேன். தீங்கு விளைவிக்கும் முயற்சிகள் மற்றும் சோதனைகள் இருந்த போதிலும், நான் நம்பும் சக்தி என்னைக் காப்பாற்றும்" என்று சிவக்குமார் கூறினார். அவர்களின் பெயர்களை வெளியிடுமாறு என்னை வற்புறுத்துவதற்கு பதிலாக, அவர்களை கண்டுபிடித்து அம்பலப்படுத்த வேண்டும் என ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜூன் 2-ம் தேதி பெங்களூருவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அனைத்து எம்எல்சி, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் சிவக்குமார் தெரிவித்தார். கூட்டத்தில் கட்சி விவகாரங்கள் மற்றும் எம்எல்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்றார். லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் முழு வெற்றி கிடைக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!