நாளை வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

நாளை வரை சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு வனத்துறையினரும், மாவட்ட  நிர்வாகமும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம், அமாவாசை , பௌர்ணமி  நாட்களில் பக்தர்களின் தரிசனத்திற்காகவும், சிறப்பு பூஜைகளுக்காகவும் சதுரகிரி மலை மேல் இருக்கும் சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில்  சதுரகிரியில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த மே 17ம் தேதி முதல் நாளை மே 20ம் தேதி வரை  பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!

தற்போது கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக் கூடாது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது. காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.

சதுரகிரி

இந்த நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும்  செய்து வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web