சதுரகிரி கோவிலுக்கு செல்லத் தடை... பக்தர்கள் கடும் அவதி...!!

 
சதுரகிரி

விருதுநகர் மாவட்டத்தில்  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி கோவில்  தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

அந்த வகையில் இந்த மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் 14ம்  தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை   ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சதுரகிரி

இதன் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 
நீர்வரத்தின் அளவு குறைந்த பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என பக்தர்கள் கோவிலில் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web