இன்று சென்னை டெல்லி அணிகள் மோதல்... வெற்றி பெறுமா சிஎஸ்கே? எகிறும் எதிர்பார்ப்பு... ஆர்வத்தில் ரசிகர்கள்!

 
சிஎஸ்கேடெல்லி கேப்பிடல்ஸ்

டி 20 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்  இந்தியாவின் முக்கிய  நகரங்களில் நடத்தப்பட்டு  வருகிறது. மொத்தம் உள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும் . இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியல் அடிப்படையில் பிளே ஆப் சுற்று நடத்தப்படும்.

சிஎஸ்கேடெல்லி கேப்பிடல்ஸ்

முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.  இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகள்  குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  இதனைஅடுத்து  புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்தடுத்த சுற்றுகளில்  டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டன.  இன்று மே 20 ம் தேதி சனிக்கிழமை 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 67வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்சுடன் விளையாட உள்ளது.  அடுத்த ஆட்டத்தால் 68வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.  சென்னை அணியை பொறுத்தவரை  இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

சிஎஸ்கேடெல்லி கேப்பிடல்ஸ்

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தனது கடைசி லீக்கான இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் போதுமானதாகும். தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும். ஒருவேளை சென்னை அணி தோற்று விட்டால் லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகள் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படலாம். சென்னை அணி அடுத்த சுற்றுக்குள் நுழைய வெற்றி பெற வேண்டியது அவசியம். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.டெல்லி அணி  சொந்த மண்ணில் நடைபெறும் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க முழு வீச்சில் களமிறங்கும்.  இதுவரை இவ்விரு அணிகளும்  ஐ.பி.எல். தொடரில்   28 முறை நேருக்கு நேர் மோதியதில் 18ஆட்டங்களில் சென்னையும், 10 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி பெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web