சென்னை புத்தக கண்காட்சி.. ரூ.1 லட்சம் தொகையுடன் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது யார் யாருக்கு? வெளியானது பட்டியல்!

 
புத்தக கண்காட்சி

 பபாசி சார்பில் சென்னையில் நடைபெற உள்ள 48வது புத்தகக் கண்காட்சியில் 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் அருணன் உள்ளிட்டோருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தக கண்காட்சி book fair

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இம்மாதம் 27ம் தேதி மாலை 4 மணிக்கு 48வது புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுதை பேராசிரியர் அருணன், நெல்லை ஜெயந்தா, சுரேஷ்குமார் இந்திரஜித், ஸ்ரீராம், கலைராணி, நிர்மால்யா ஆகியோருக்கும், சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பு செம்மல் கணபதி விருதை கற்பகம் புத்தகாலயத்திற்கும், சிறந்த நூலகர், புத்தக விற்பனையாளர், சிறந்த பெண் எழுத்தாளர் உள்ளிட்டோருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறும் 6 பேருக்கும் சான்றிதழுடன் தலா ஒரு லட்சம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தக கண்காட்சி

டிசம்பர் 27ம் தேதி துவங்கும் புத்தக கண்காட்சி தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் நிலையில் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் 8:30 வரையும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் மாலையில் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்வில் நீதியரசர் ஆர்.மகாதேவன் விழா நிறைவுரை நிகழ்த்துகிறார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!