சென்னை ரசிகர்கள் ஷாக்... தீபக் சஹார் சொன்ன அதிர்ச்சி தகவல்!

 
தீபக் சஹார்

சென்னை ரசிகர்கள், ஒவ்வொரு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் போதும் உற்சாகத்தின் விளிம்புக்கு சென்று விடுகின்றனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றாலும், வேறு எந்த மாநிலத்திலும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் முதல் நாள் இரவே காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியதில்லை. அடிதடியையும் சமாளித்து சென்னை அணிக்கு  தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டுள்ள சென்னை அணி வீரர் தீபக் சஹார்,  சென்னை ரசிகர்களுக்கு, தான் முழுமையாக இன்னும் உடல் தகுதியை எட்டவில்லை என்கிற அதிர்ச்சியான தகவலைக் கூறியிருக்கிறார். 

Deepak Chahar

சென்னை அணி அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி வாகை சூடி வருகிறது. அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டன் என்று தோனி மறைமுகமாக நேற்றைய போட்டியின் பிறகான பேட்டியில் கூறியிருந்தார். 

Deepak Chahar

இந்நிலையில், நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு பின்னர் பேசிய தீபக் சஹார், தான் இன்னும் 100 சதவீத உடல் தகுதியை எட்டவில்லை என்றும், காயத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே முயற்சிக்க வேண்டுமெனவும், தன்னால் இயன்றவரை பங்களிப்பு செய்ய முயற்சிப்பதாகவும் கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web