ஜன.5ம் தேதி சென்னை மாரத்தான் ஓட்டம்... அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ சேவை!

 
மெட்ரோ

ஜனவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு ஜன.5ம் தேதி அதிகாலை 3 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் ​என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 5.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ப்ரெஷ் வொர்க்ஸ் மாரத்தானுடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ ரயில் சேவைகள் வருகின்ற ஜனவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில்

அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ​மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி ஜனவரி 5ம் தேதி அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.

மெட்ரோ ரயில்

வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று ஒரு நாள் மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web