ஆம்னி பேருந்துகளில் சென்னை, நெல்லை ரூ4000 கட்டணம்... பயணிகள் கடும் அவதி!
Jan 9, 2025, 09:15 IST
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். பொதுமக்களின் தேவை மற்றும் வசதி அடிப்படையில் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சில ஆம்னி பேருந்துகளில் ரூ.4,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
