கல்லூரி மாணவர் மரணம்... திங்கட்கிழமை வரை சென்னை மாநிலக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு இன்றும், நாளையும், திங்கட்கிழமையும் திடீரென விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி மாநில கல்லூரி மாணவர் சுந்தர் (19) என்பவரை ரூட் தல விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கொடூரமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர், சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி மானவர் சுந்தர் இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பெரியமேடு போலீசார், இதை கொலை வழக்காக மாற்றி மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி, பிரசாத், கமலேஸ்வரன் ஆகிய 5 பேரைப் பிடித்து பெரியமேடு போலீசார் ஏற்கனவே கைது செய்து, அல்லிக்குளத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த மாணவர்களை வருகிற அக்டோபர் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாணவர்கள் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ருந்த மாணவர் சுந்தர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மேல் அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும் திங்கட்கிழமை வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை உயிரிழந்த மாணவர் சுந்தருக்கு கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மெளன அஞ்சலி செலுத்தினர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
