சென்னை - திருவண்ணாமலை புதிய ரயில் சேவை திடீர் ரத்து.. பயணிகள் அதிர்ச்சி!
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை தொடங்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், திருவண்ணாமலை இருந்து சென்னைக்கு மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டது.

இந்த அறிவிப்பு மாதந்தோறும் கிரிவலம் செல்கிற பக்தர்களுக்கும், திருவண்ணாமலைக்கு ஆன்மிக சுற்றுலா செல்பவர்களுக்கும், திருவண்ணாமலை அருகே உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் இனிப்பான செய்தியாக இருந்து வந்த நிலையில், திடீரென சென்னை டூ திருவண்ணாமலை இடையேயான ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை திருவண்ணாமலையில் இருந்து 4 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவையை நிறுத்தி வைப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு தொடங்கப்பட்ட ரயில் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றளிப்பதாக பயணிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
