சென்னையில் பாரம்பரிய வழித்தடம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மாநகராட்சிக்கான முக்கிய திட்டங்கள், அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் சென்னையின் பாரம்பரிய வழித்தடமான மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் 10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். சென்னையின் முக்கிய போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் ரூ.5 கோடி செலவில் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்படும்.

சென்னையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கைவண்ணம் சதுக்கம் அமைக்கப்படும்.கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ.7 கோடி செலவில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். சென்னையில் ரூ30 கோடி செலவில் 3 பன்னோக்கு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் அமைந்துள்ள 10 சுரங்க பாதைகள் ரூ.8 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தியாகராய நகர் பேருந்து நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் . போரூர் மற்றும் பெருங்குடி ஏரிகள் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். ஐயப்பன்தாங்கல், தி.நகர் , திருவான்மியூர் ஆவடி ,பாடிய நல்லூர் மற்றும் தங்கசாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையங்கள் தலா ரூ10 கோடியில் மேம்படுத்தப்படும்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
