ரஜினிக்கு செக்?! இனி படத்தின் லாப - நஷ்டத்தில் நடிகர்களுக்கும் பங்கு.. செயற்குழு தீர்மானம்!

 
தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 23 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக, முன்னணி நடிகர்கள் இனி படங்களுக்கு நிரந்தர சம்பளம் பெறாமல், வியாபார பங்கீட்டுத் திட்டத்தில் (profit-sharing model) மட்டுமே நடிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சிம்பு, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின் வணிக வெற்றி, நஷ்டத்தில் பங்கு பெற வேண்டும் எனக் கூட்டத்தில் கூறப்பட்டது.

தயாரிப்பாளர்கள்

மேலும், நடிகர்கள் மற்றும் முக்கிய படக்குழு உறுப்பினர்கள் வெப் சீரிஸ்களில் ஈடுபடாமல் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. முன்னணி நடிகர்கள் தனியார் நிறுவனங்கள் நடத்தும் விருது விழாக்கள், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு கூடுதலாக, முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டது.

தயாரிப்பாளர்கள்

இதற்கிடையில், செயற்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டபோது சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக இயக்குநர் பிரவீன்காந்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சில நிமிடங்கள் பதட்ட நிலை உருவானது. பின்னர் சூழல் சமனடைந்த நிலையில் கூட்டம் தொடர்ந்தது. தமிழ் சினிமாவின் வணிக வடிவமைப்பை மாற்றக்கூடிய முக்கிய முடிவாக இந்த தீர்மானம் பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!