Hats off.. நடிகை கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட சிஐஎஸ்எப் வீரருக்கு இயக்குநர் சேரன் ஆதரவு!

இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வான நடிகை கங்கனா ரனாவத், டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர், கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
ரூ.100, ரூ.200 வாங்கிக் கொண்டு விவசாயிகள் போராட்ட களத்தில் அமர்ந்திருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் கூறியிருந்த நிலையில், ‘என் தாயாரும் அந்த போராட்டக் களத்தில் இருந்தார். விவசாயிகளின் போராட்டத்தை நடிகை கங்கனா கேவலப்படுத்தியுள்ளார்’ என்று விசாரணையில் குல்விந்தர் கவுர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.. https://t.co/vE6Ue86Yyx
— Cheran (@directorcheran) June 7, 2024
இந்நிலையில், விமானநிலையத்தில் நடிகை கங்கனா தாக்கப்பட்ட வீடியோ வைரலான நிலையில், வீராங்கனை குல்விந்தர் கவுருக்கு இயக்குநரும், நடிகருமான சேரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பதிவிட்டிருந்த இயக்குநர் சேரன், “இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன். அந்த அடி நடிகைக்கானதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.. என்று குறிப்பிட்டுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!