ரஜினி, சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் குகேஷ்!
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை 7.5 - 6.5 என்ற கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றாா்.
இந்த சாம்பியன்ஷிப் வரலாற்றில், கோப்பை வென்ற மிக இளம் போட்டியாளா் (18) என்ற சாதனையை குகேஷ் படைத்திருக்கிறாா். இந்தப் போட்டியில் வாகை சூடிய 2வது இந்தியா் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளாா்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், குகேஷை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து, பொன்னாடை போர்த்தி புத்தகம் பரிசளித்து வாழ்த்தியுள்ளார்.
அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் குகேஷை தனது வீட்டிற்கு அழைத்து, குகேஷுடன் கேக் வெட்டி விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்து வாழ்த்தியுள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!