“முதலில் ரேபரேலியில் ஜெயிக்க பாருங்க” ராகுல் காந்தியை விளாசிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ்!

 
கேரி காஸ்பரோவ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சீண்டும் விதமாக 'முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள்' என குறிப்பிட்டு செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமேதி, ரேபரேலி  தொகுதிகளில் போட்டியிடப் போகும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்று பல வாரங்களாக எதிர்பார்ப்பை எகிற செய்து வந்த நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.


இந்நிலையில் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏன் அமேதியில் இருந்து ஓடுகிறீர்கள் என்று பிரதமர் மோடி கேள்வியெழுப்பி இருந்தார்.  தங்கள் மூதாதையர்களின் தொகுதியில் நிற்க கூட ராகுல் பயப்படுகிறார் என்று பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், பாஜகவினரின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற செய்திக்கு பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் அரசியல் மற்றும் சதுரங்கத்தில் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என பகிர்ந்திருந்தார்.

🚨🚨 Now I understood why he posted this video on Chess and it's tactics and compared it with politics!!☠️🔥🇮🇳 pic.twitter.com/en234JSvDU

— Newton (@newt0nlaws) May 3, 2024



சொல்லி வைத்தாற்போன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், அவர் செஸ் விளையாட்டை அரசியலுடன் ஒப்பிட்டு பேசினார். தனக்கு 7 வயதாக இருந்தபோது முதலில் செஸ் விளையாடியதாகவும், பின்னர் விளையாட்டின் விதிகளை கற்றுக் கொடுத்தவரை வெற்றி கொண்டதாகவும் அந்த வீடியோவில் கூறியிருந்தார். 


மேலும், தனக்கு பிடித்த செஸ் வீரர்களில் ஒருவரான கேரி காஸ்பரோவ் தனது எதிரிகள் மீது நிறைய உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துபவர் என்றும் அவர் நான் - லீனியர் திங்கர் என்றும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.


 

இந்நிலையில் ட்விட்டரில் ராகுல் காந்தியின் பதிவு வைரலான நிலையில், @SandipGhose எனும் ட்விட்டர் பயனர், கேரி காஸ்பரோவ்வை டேக் செய்து, “நல்ல வேளை... ரஷ்ய உலக சதுரங்க சாம்பியனும் (கேரி காஸ்பரோவ்), கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்தும் முன்கூட்டியே ஓய்வு பெற்றுவிட்டதால் நம் காலத்தின் மிகச்சிறந்த சதுரங்க மேதையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ராகுல் காந்தியின் செஸ் ஆர்வத்தை விமர்சித்து பதிவு வெளியிட்டிருந்தார். 
இந்நிலையில், இது கேரி காஸ்பரோவ் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவைப் பார்த்து, “முதலிடத்திற்கு சவால் விடுவதற்கு முன்பு நீங்கள் முதலில் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும்" என பதிலளித்தார்.

ரஷ்ய சதுரங்க சாம்பியன் கேரி காஸ்பரோவின் இந்த பதிவு ராகுல் காந்தியை சீண்டும் வகையில் அமைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரி காஸ்பரோ வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், 'ஒரு அரசியல்வாதி என் அன்பான விளையாட்டில் தலையிடுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இந்திய அரசியலில் வாதிடுவதற்கும் நிபுணத்துவம் பெறுவதற்கும் எனது சிறிய நகைச்சுவை பயன்படாது என நான் நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web