சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த் திருவிழா ... பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்!

 
சிதம்பரம் நடராஜர் தேர் தேரோட்டம்

 சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. கடலூர் மாவட்டம்  சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவிற்கான கொடியேற்றம் ஜூலை 3ம் தேதி தொடங்கியது. 10 நாட்களாக தினமும்  பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம்  இன்று நடைபெற்று வருகிறது.  

சிதம்பரம்


தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட தேர்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகள் வீதி உலா வருகின்றன.  சிதம்பரம் கீழவீதியில் தொடங்கி 4 மாட வீதிகளையும் தேர் வலம் வந்தது. பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து பிடித்தனர்.நான்கு வீதிகளையும் தேர் வலம் வந்த பிறகு இரவு நிலைக்கு வரும்.   ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது.

சிதம்பரம் நடராஜர்

நாளை பல்வேறு ஆராதனை, அர்ச்சனைகள் நடைபெற்ற பிறகு பிற்பகல் ஒரு மணிக்கு   ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறும். அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆனந்த நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இந்த திருவிழாவை காண உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் குழுமியுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web