தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தாயார் மறைவு... முதல்வர் நேரில் அஞ்சலி, இரங்கல்!

 
ராமன்


 
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் . இவரது   தாயார் கல்பகம் ராமன்  உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின்  நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ மறைந்த வி.பி.ராமனின் மனைவியும்,  தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமனின்  தாயாருமான திருமதி கல்பகம் ராமன்  மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

ராமன்

அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். அன்னையை இழந்து வாடும் பி.எஸ். ராமன், அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஆறுதல்கள் .மறைந்த வி.பி.ராமன் திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். திமுகவின் சட்டதிட்டங்களை வகுப்பதில் பெரும் பங்காற்றியவர். சட்டத்துறையில் அனைவரும் வியந்து பார்க்கக் கூடிய மிகச்சிறந்த வல்லுநரும் கூட.  நமது அரசு பொறுப்பேற்றவுடன், அவரது இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அதில் கூட கல்பகம் ராமன்  எனக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கி நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

அந்நிகழ்வு  இப்போதும் என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. வி.பி.ராமன்  சட்டத்துறையில் சிறந்து விளங்க உறுதுணையாக இருந்தவர் மறைந்த திருமதி கல்பகம் ராமன் தான் என்றால் மிகையாகாது. அவரது மறைவால் வாடும் பி.எஸ்.ராமன் அவரது குடும்பத்தினர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web