வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் விபத்தில் பலி!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணி புரிந்து வந்த தலைமைக் காவலர் அமுதா(47), வாக்கு எண்ணிக்கை மையத்தில் தன்னுடைய பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், விபத்தில் பலியானார்.

நாமக்கல், ராசிபுரம் அருகே உடையார்பாளையத்தைச் சேர்ந்த அமுதா(47), ஆயில்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பணிக்கு சென்றவர் இரவு 10.30 மணிக்கு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, திருச்செங்கோடு - ராசிபுரம் சாலை கல்லுப்பாளையம் பிரிவு சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வேகமாக வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்று தலைமைக் காவலர் அமுதாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே தலைமைக் காவலர் அமுதா உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுச்சத்திரம் காவல்துறையினர், அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
