"காலில் விழுகிறேன்... தயவு செய்து வேலைய முடிங்க" ஐஏஎஸ் அதிகாரியிடம் கெஞ்சிய முதல்வர் !

 
பீகார்
 

நேற்று முதல் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்படியொரு முதல்வர் இருந்தா எந்த மாநிலமாக இருந்தாலும் வளர்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கிவிடும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


பிகார் மாநில முதலமைச்சராக 9வது முறையாக பதவி வகித்து வரும் நிதிஷ் குமார் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம், ‘உங்க காலில் விழுகிறேன்... தயவு செய்து வேலையை முடிங்க’ என்று கெஞ்சியபடியே பேசுவது பொதுமக்களிடையே வைரலாகி வருகிறது. 

பீகார்


பாட்னாவில் சாலை பணிகளை சீக்கிரமாக முடிப்பது குறித்து ஐஏஎஸ் அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒரு கட்டத்தில் "காலில் கூட விழுகிறேன். சரியான நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும்" என கெஞ்சியபடி பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதே சமயம் பீகாரில் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web