ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
முதல்வர் ஸ்டாலின்

 பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்  நேற்று இரவு வீட்டிற்கு முன் நின்று பேசிக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து வெட்டி சாய்த்தனர். இந்த படுகொலை சம்பவம்  தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து  முதல்வர் ஸ்டாலின் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்  “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங்   படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.  

ஆம்ஸ்ட்ராங்

திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web